• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மின்சார துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த வழக்கறிஞர் சங்கத்தினர்..,

ByT. Balasubramaniyam

Feb 5, 2026

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க ரூ101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சமீபத்தில் அரசாணை பிறப்பித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து,ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு நிதி ஒதுக்கீடு அரசாணை பெறுவதற்கு பரிந்துரை செய்து ,அதனைப் பெற்றுத் தந்த மாவட்ட திமுக செயலாளர். தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி .சிவசங்கரை ,மாவட்ட திமுக அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் மூத்த வழக்கறிஞர்கள் என் மணி, எஸ் ஷங்கர்,கே.ஆர் .சிவம் ஆகியோர் தலைமையில் நேற்று நேரில் சந்தித்து, அமைச்சருக்கு சால்வை அணிவித்து
தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் சி சின்னதம்பி, த.ஆ கதிரவன், இராம மனோகரன், வீ.முத்துகுமரன் ,சிவாஜிபாலாஜி, எம்.ராஜா, சசிகுமார், ஜெ கணேசன்,பொன்.செல்வம், இராமலிங்கம், இராஜசேகர் , அன்பரசன் ,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.