திண்டுக்கல் அருகே செக் டேம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கன்னிவாடி வனச்சரகத்திற்கு கட்டுப்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை பகுதியில் மலைகளில் இருந்து வரும் நீரோடைகளை மறித்து தனிநபர் இரண்டு மிகப்பெரிய அணைகளை கட்டியுள்ளார்.

100 மீட்டர் நீளம் உள்ள இரண்டு அணைகள் கட்டியுள்ளதால் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட சிறு குட்டைகளுக்கு தண்ணீர் செல்லவில்லை கோம்பை அணைக்கு தண்ணீர் செல்லவில்லை என விவசாயிகளின் புகாரையடுத்து
மாவட்ட வனத்துறை அதிகாரி ஆய்வு செய்து கன்னிவாடி வனச்சரகர் நேரடி பார்வையில் பொது மக்களையும் விவசாயிகளையும் வனவிலங்குகளையும் பாதிக்கும் படி அமைக்கப்பட்ட அணைகள் தற்போது உடைக்கப்பட்டு வருகிறது.
அணைகளை முற்றிலுமாக இடித்து நீரோடைகளை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.










