• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு..,

ByM.I.MOHAMMED FAROOK

Feb 1, 2026

காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன மின் விளக்குகளுடன் கூடிய உலகத்தரத்திலான பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.

   மீனவ கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கத்தை புதுச்சேரி மாநில அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பேட்மிண்டன் விளையாடி விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார்.

மீனவ கிராமத்தில் பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் பேட்மிண்டன் உள்விளையாட்டு திறக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.