பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் திராவிட மாணவர் கழகம் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், ஏற்கனவே நீட் தேர்வினால் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்பை சிதைத்துவரும் ஒன்றிய அரசு, தற்போது பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கிறது என்று ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திமுக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.










