சென்னை அடுத்த தாம்பரம்”, மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பெரிய ஏரி”,” பகுதியில் இருந்து மண்ணைத் திருடி, அருகிலுள்ள புத்துக்கோயில் வளாகம்”, பகுதியில் குவித்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மண் குவிப்பு நடைபெறும் இடம், ரங்கநாதர் பெருமாள் கோயில்”,உடைய நிலம் என்பதால், சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், திருநீர்மலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் மண்ணை கொட்டி வைத்து அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏரியில் இருந்து மண் அகற்றப்படுவதால் நீர்நிலையின் பாதுகாப்பு, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கோயில் நிலத்தில் நடைபெறும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும், கடும் எதிர்ப்பும் ஏற்படுத்தியுள்ளது.






