தமிழகத்தில் மிக பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய சக்தி தலமாகவும் திகழும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் 12 வருடங்களுக்கு பிறகு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக ஆறு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க துவங்கியது.
அதனை தொடர்ந்து காசி ராமேஸ்வரம் காவேரி என பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட புனித நீரை ஆலயத்தை சுற்றி எடுத்து வரவழைக்கப்பட்டு கருடன் வானத்தில் வட்டமிட்ட பிறகு ஓம் சக்தி பராசக்தி என வேத மந்திரங்கள் முழங்க கும்பத்திற்கு புனித நீரை ஊற்றி வழிபட்டனர்.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் புதுக்கோட்டை திருச்சி மதுரை சிவகங்கை, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலய தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிகழ்வில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவவி.மெய்யநாதன் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






