பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற பயத்தில் ஆபத்தை உணராமல் செயல்படும் மாணவ, மாணவியர்கள். காலையில் பள்ளிக்கு செல்ல தாமதம் ஆகி விட கூடாது, தாமதமானால் ஆசிரியர்கள் தண்டிப்பார்கள் என்ற பயத்தில் ஆபத்தை உணராமல் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் ரயில்வே கேட் கடந்து செல்கின்றனர்.

விருதுநகர், தந்திமர தெரு இரண்டாவது ரயில்வே கேட்டில் தான் தினமும் காலை, மாலை வேலைகளில் மாணவ, மாணவியர்கள் இது போன்ற ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். இது குறித்து தங்கவேல் கூறுகையில் ” இது போன்ற காட்சிகளை நாள்தோறும் காணமுடிகிறது, இங்கு ரயில்வே தரைப்பாலம்,அல்லது மேம்பாலம் அமைக்கலாம், ஆனால் அதற்கு முன்பு பள்ளி,ஆசிரியர், ஆசிரியைகள் இது போன்ற செயலில் ஈடுபட கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதே சமயம் பள்ளிக்கு தாமதமாக வந்தால் தண்டிக்க கூடாது என்று கூறினார்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்பி மாணவ, மாணவியர்கள் நலன்காக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் கோரிக்கையாக உள்ளது.






