• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கபாடி வாலிபால் விளையாட்டு போட்டிகள்..,

ByKalamegam Viswanathan

Jan 24, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது.

இந்த விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிக்கு தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் முருகேசன் வரவேற்றார். விளையாட்டு போட்டியில் மதுரை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கபாடி மற்றும் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். முடிவில் பள்ளி மேலாளர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.