கோவையில் கடந்த 48-ஆண்டுகளாக கோயமுத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பாக டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது..
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டென்னிஸ் லீக் 2026 போட்டிகள் ஜனவரி 24 ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது..

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கேரள கிளப் அரங்கில் நடைபெற்றது..
இதில் கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாசன், செயலாளர் சதீஷ் நாயர்,மற்றும் நிர்வாகிகள் பேசினர்..
இப்போட்டிகள் கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி என ஒவ்வொரு மாவட்டங்களிலிலும் வார இறுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தனர்..
2024 இல் 109 அணிகளாக இருந்த லீக், 2025 இல் 111 அணிகளாக வளர்ச்சி பெற்ற தற்போது,2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள லீக்கில் எ முதல் கே வரை 11 பிரிவுகளில் 116 அணிகள் மற்றும் சுமார் 1,200 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.
1977 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் டேவிஸ் கப் போட்டிகளை கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் வெற்றிகரமாக நடத்தியதாக கூறிய அவர்,. 1978 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் தனது முதல் டென்னிஸ் லீக் போட்டியை துவங்கியதாக தெரிவித்தனர்.

கோவை மாவட்ட நிர்வாகம் டென்னிஸ் விளையாடுவதற்கென தனி மைதானம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்த நிர்வாகத்தினர், அவ்வாறு ஒதுக்கீடு செய்தால் கோவையில் இருந்து டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச வீரர்கள் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது, துணைத் தலைவர் சேக்கலிங்கம், இணை செயலாளர் டாண்டூ, துணைத் தலைவர் திரு. சதாசிவம் மற்றும் பொருளாளர் திரு. நரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்…






