மதுரை மாவட்டம் வாடிப்பட்டியருகே உள்ள குரங்கு தோப்பு பகுதியை – சேர்ந்தவர் கண்ணன் (52) இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகள் சுவாதி (25) அழைத்துக் கொண்டு வாடிப்பட்டி செல்வதற்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டூவிலரில் சென்று கொண்டிருந்தனர். சாணம் பட்டி பிரிவு அருகே சென்ற இவர்களது டூவிலர் மீது தேனியிலிருந்து மதுரை நோக்கி வந்த சொகுசு கார் பயங்கரமாக மோதியது இதில் இருவரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் விபத்தில் சிக்கிய தந்தை, மகள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தந்தை, மகள் இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
டூவிலர் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






