மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவாக இருந்து வருகின்றனர்.

தைப்பொங்கல் அன்று விளையாட்டு போட்டி நடத்த ஒரு பிரிவை சேர்ந்த நபர்கள் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கடந்த வாரம் விளையாட்டு போட்டிகளை நடத்தினர் மற்றொரு பிரிவை சேர்ந்த நபர்களும் நீதிமன்றத்தை அணுகி விளையாட்டு போட்டியை நடத்த அனுமதி கோரினர். நீதிமன்றம் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கிய நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அதற்கு தடை பெறப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் கிராம மந்தையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கொட்டும் பணியில் தங்களுக்கு விளையாட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்றமும் காவல்துறையும் ஒரு தரப்புக்கு அனுமதி கொடுத்து மற்றொரு தரப்புக்கு அனுமதி மறுத்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






