• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கூடுவாஞ்சேரியில் ராயல்ஓக் பர்னிச்சர் புதிய கிளை திறப்பு..,

ByPrabhu Sekar

Jan 23, 2026

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரம், ஜி.எஸ்.டி பிரதான சாலையில் உலகப் புகழ்பெற்ற Royal Oak Furniture நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பட்டயக் கணக்காளர் ராஜசேகரன், அரிஹரன் கார்போரேஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில் சுப்புரமணியம், ராயல்ஓக் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் சுப்புரமணியம், ராயல்ஓக் இன்கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் தலைவர் கிரண் சபாரியா, தமிழ்நாடு மற்றும் கேரளா பிராந்திய தலைவர் ரஞ்சித் கப்பட்டு, விஎம் & என்எஸ்ஓ தலைவர் தம்மய்யா கோட்டேரா, வணிக மேம்பாட்டு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கிளையைத் திறந்து வைத்தனர். பின்னர் அவர்கள் கடையை பார்வையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விருந்தினர்கள் கூறுகையில், ராயல்ஓக் பர்னிச்சர் நிறுவனம் தற்போது 40 கிளைகளுடன் செயல்பட்டு வருவதாகவும், உலகத் தரமிக்க பர்னிச்சர்கள் குறைந்த விலையிலிருந்து உயர்ந்த விலை வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

வாடிக்கையாளர் சேவையே நிறுவனத்தின் முக்கிய அடிப்படை எனவும், கூடுவாஞ்சேரி பகுதியின் வேகமான நகர வளர்ச்சியே இங்கு புதிய கிளை துவங்குவதற்குக் காரணம் எனவும் கூறினர். மேலும், அனைத்து கிளைகளிலும் ஒரே விலை நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அவர்கள் விளக்கினர்.

இந்த புதிய கிளை திறப்பு மூலம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தரமான பர்னிச்சர்கள் எளிதில் கிடைக்கும் என தெரிவித்தனர்.