மதுரை திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்குளத்தில் 51 பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. முன்னதாக திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் ஜீவஜோதி மருத்துவ பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்குளம் கிராமத்தில் தனியார் மஹாலில் உலக மாற்று திறனாளிகள் ஆண்டு விழாவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட பார்வையற்றோர் நல சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். பொருளாளர் சுதா வரவேற்புரை கூறினார். மாவட்ட மாற்றுதிறனாளிகள் தொழில் நல அலுவலர் வெங்கட சுப்பிரமணியன். திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் ஜீவஜோதி திருப்பரங்குன்றம் தாசில்தார்கவிதா ஆகியோர் கலந்து கொண்டு 51 பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

முன்னதாக TVS மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ராமசந்திரா கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் 400 கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.





