திண்டுக்கல் அருகே அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல் – அரிசி அரவை மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி காமாட்சிபுரம் பகுதியில் தனியார் அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து தனியார் அரவை மில்லில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டபோது ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது

இதனையடுத்து தனிப்படை போலீசார் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த பல்லடம்-தை சோ்ந்த பிரசாத்குமாா் (32), கரூரைச் சோ்ந்த ராம்குமாா்(26), ராமநாதபுரத்தை சேர்ந்த சந்திரசேகா்(53), சவேரியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்ராசு (20),அஜய் (27), அய்யலூரை சோ்ந்த சுப்பிரமணி (58) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 40 ஆயிரம் கிலோ ரேஷன், அரிசி மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அரிசி மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது.





