தமிழகத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று அடங்காத ஆர்ப்பரிப்புடன் மாடுபிடி வீரர்களை பந்தாடிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவில்பட்டி ஏவிஎம் பாபு அவர்களின் நரசிம்மா காளை டிராக்டரை பரிசாக வென்றது அத்துடன் பசு கன்று ஆகியவையும் பரிசாக தரப்பட்டது

இதனைத் தொடர்ந்து ஏவிஎம் பாபு அந்தப் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இன்று டிராக்டர் மற்றும் மாடு ஆகியவற்றை ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கலெக்டர் அருணாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். கலெக்டர் அருணா மாட்டின் திறமையையும் பாபுவின் மாடு வளர்க்கும் முறைகளையும் கேட்டு அறிந்து வாழ்த்து தெரிவித்தார் அவருடன் அவரது மகள் ஆனந்தி உடன் வந்திருந்தார்.
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் ஏவிஎம் பாபு கூறுகையில் தமிழகத்திலே முதல் முதலாக டிராக்டரை எங்களது நரசிம்மா காளை பரிசாக வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது

ஒரு மகனை வளர்த்து ஆளாக்கி அவன் முதன்முதலாக சம்பளம் பெற்று பெற்றோரிடம் வழங்குவது எப்படி மகிழ்ச்சி தருமோ அதே மகிழ்ச்சி நான் இன்று அடைந்துள்ளேன்
இதனை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காண்பித்து வாழ்த்துக்களையும் பெற்றேன்
இத்தகைய செயல்கள் ஜல்லிக்கட்டு காலை வளர்ப்பதற்கான எனது முயற்சிக்கு மேலும் ஒரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.





