• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிபுரம் சானல்கரை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சுமன் (26) என்பவரை சோதனை செய்ததில் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோவிற்கு மேல் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரை பார்த்ததும் ஓடியவரை சில தூரம் துரத்தி பிடித்தது குறிப்பிடத்தக்கது.