மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் இன்று தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார்.

முதலாவதாக சென்ற இடமான மலைவாழ் மக்கள் வசிக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் மக்களின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு முறையான பதில் அளிக்காத வி.ஏ.ஓ மற்றும் வட்டாச்சியர் பாலகிருஷ்ணனை கடிந்து கொண்டார். நான் என்ன சுற்றுலாவிற்கா வந்துள்ளேன்., முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டாமா என கடுமையான வார்த்தைகளால் வெழுத்து வாங்கி சென்றார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன்., நில எடுப்பு தனி வட்டாச்சியராகவும், அதே பணிக்கு, அப்பணியில் இருந்த கார்த்திகேயன் உசிலம்பட்டி வட்டாச்சியராக நியமிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வன் பட பாணியில் அதிரடி ஆய்வு மற்றும் உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.





