புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பெனட் அந்தோணி ராஜ் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முருகேசன் ( வடக்கு) ராம. சுப்புராம் Ex MLA ( தெற்கு) முன்னாள் நகராட்சி நகர்மன்ற தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் துரை. திவியநாதன் வழக்கறிஞர் அணியின் தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர்கள் செம்பை மணி வேங்கை அருணாசலம் ராமநாதன் கந்தர்வகோட்டை ராமையா வட்டாரத் தலைவர்கள் சூர்யா பழனியப்பன் அன்னவாசல் சுப்பிரமணியன் மாநகர தலைவர் மதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் புதுக்கோட்டை மாநகருக்குள் உள்ள மகாத்மா காந்தி காமராஜர் தீரர் சத்தியமூர்த்தி டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு பெனட் அந்தோணி ராஜ் மற்றும் வட்டார நகர மாநகர கிராம வார்டு கமிட்டியினர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் மாயக் கண்ணன் செந்தாமரை குமார் சப்பானிமுத்து வீசா. இ. விஜயகுமார் சண்முகம் சங்கிலி முத்து பழனிசாமி கீரனூர் நகர தலைவர் பாஸ்கரன். புதுக்கோட்டை வட்டாரம் ஜெய்சங்கர் ரங்கராஜன் கறம்பக்குடி ஞானசேகரன் தங்கசிவா சுப்பிரமணியன் நிஜாம் கோவிந்த ராஜன் வீரையா நகர காங்கிரஸ் துணை தலைவர்கள் திருவப்பூர் மணி ஆறுமுகம் நாச்சிமுத்து தினேஷ் குமார் தெற்கு மாவட்ட ஓபிசி அணி தலைவர் ஆனந்தன் வடக்கு பொதுச்செயலாளர் எஸ் பி ஆறுமுகம் மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் குட்லக் ஏ. ஆர் முகமது மீரா கலைப் பிரிவு தலைவர் மயில் வாகனன் திருமலை ராயன் சமுத்திரம் சோலை அடப்பன்கார சத்திரம் ராஜேந்திரன் கவி நாடு மேற்கு சன்னாசி மறவப்பட்டி சண்முகம் அன்னவாசல் சத்தியமூர்த்தி சின்னையா கனேஷ் ரபீக் முகமது கனி சஞ்சய் காந்தி அடப்பன்வயல் காதர் MAK சேட்டு சிவா நமசிவாயம் வயலோகம் ஜான் குணசேகரன் காந்தி குடுமியான்மலை தங்கவேலு அடைக்கலம் பழனி சத்தியமூர்த்தி சின்னையா மகேந்திரன் மகளிர் காங்கிரஸ் தலைவர்கள் கவுரி சிவந்தி நடராஜன் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். புதிய தலைவராக பொறுப்பேற்ற பெனட் அந்தோணி ராஜ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.





