• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..,

ByT. Balasubramaniyam

Jan 20, 2026

அரியலூர் அண்ணா சிலை .அருகே, அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடை பெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சேட்டு (எ) எம். ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி. சிவசங்கர், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட இணைச் செயலாளர் பவானி வெள்ளைச்சாமி, துணைச் செயலாளர்கள் வாசுகி இராஜேந்திரன், தங்க பிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் எம். அன்ப ழகன், ஒன்றிய செயலாளர் கள் டி. செல்வராசு, பொய்யூர் எஸ். பாலசுப்ரமணியன், சி. சாமிநாதன், என். வடிவழகன், எஸ். அசோகன், ஆர். கல்யாணசுந்தரம், ஆர். மருதமுத்து, எம். ஜி. ராமச்சந்திரன், எஸ். வைத்தியநாதன், எஸ். விக்ரம பாண்டியன், நகரச் செயலாளர்கள் ஏ.பி. செந்தில், பி.ஆர். செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வைகோ சிவபெருமாள், எஸ். செல்லையா, பேரூர் கழக செயலாளர்கள் வி. அழகேசன், ஐ.எஸ்.டி. பன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி இரத்தினவேல், மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன், தலைமைக் கழக பேச்சாளர்கள் தாடி ம.ராசு ,அமுதா அருணாச் சலம்,முன்னாள் எம் எல் ஏக்கள் இளவழகன், இராம ஜெய லிங்கம்,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ் சிவசுப்பிரம ணியம்,தலைமை கழக பேச்சா ளர்கள் வி ஜெய பிரகாஷ்,ஆரணி கே சின்னராசு உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஒபி சங்கர், இணைச் செயலாளர் நா. பிரேம்குமார், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் முல்லை அகிலன், கல்லங்குறிச்சி பாஸ்கர், ஓ. வெங்கடாஜலபதி, அக்பர் ஷெரீஃ ப், கோபால கிருஷ்ணா, திருமுருகன், சிவ குணசேகரன், குருவாடி முருகேசன், க. ஜெயராமன், எம். சாமிநாதன், பி. சாமிநாதன், வி. ராஜா, எம். பாவேந்தன், த. ராஜா, வி. மணி சேகர், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் எஸ் வி சாந்தி, இராமகோவிந்தராஜன், மற்றும் அருங்கால் பி ஜோதிவேல், உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கே. கருணாநிதி நன்றி தெரிவித்தார்.