• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இலைக்கடம்பூரில் ஸ்ரீ சீரங்காயி ஆலய மகா கும்பாபிஷேக விழா..,

ByT. Balasubramaniyam

Mar 6, 2026

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சீரங்காயி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன்,ஸ்ரீ கருப்புசாமி, ஸ்ரீ முத்துசாமி ,ஸ்ரீ பச்சமுத்து, ஸ்ரீ பச்சையம்மன், ஸ்ரீ ராமாயி, ஸ்ரீ ஆச்சி யம்மன் ஸ்ரீ பழனியம்மாள், ஸ்ரீ ஆறுமுகம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

நேற்று முன்தினம் விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடந்தேறியது.நேற்று காலை ஒன்பதரை மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கடம் செய்யப்பட்டு, பின்னர் புனித கும்ப நீர் திருக்கோயில் விமானம் மற்றும் ஸ்ரீ சீரங்காயி பரிவார தெய்வங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தேறியது. கும்பாபிஷேக விழாவை காண அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து, சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், குலதெய்வ பத்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் குலதெய்வ பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்டது.