விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மண் குண்டாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்குப் பையில் நின்றிருந்தவரின் பையை சோதனை இட்டதில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக பையில் இருந்த 26 மது பாட்டில்களையும் ரூபாய் 4,460 பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யலுராஜை (வயது 47) போலீசார் கைது செய்தனர்.





