மதுரை அவனியாபுரத்தில் நாளி நடைபெறவுள்ள உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் நேரில் ஆய்வு செய்து, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அவனியாபுரம் பகுதியில் மட்டும் சுமார் 2,100 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தற்போது காவலர்கள் பாதுகாப்பு குறித்து ஒத்திகை நடைபெறுகிறது.
- காளைகளுக்கு மேல் காலை 10 மணிக்கு மேல் மட்டும் கொண்டு வர சொல்லி அறிவுறுத்தி இருக்கிறோம் .
அதன் பிறகு உள்ள டோக்கன் வைத்திருக்கும் காலை உரிமையாளர்கள் 10 மணிக்கு மேல் வர அறிவுறுத்தி இருக்கிறோம் ஏனென்றால் அப்போதுதான் கூட்ட நெரிசல் ஏற்படாது.

மாடுபிடி வீரர்களை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு போல மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஒரு சுற்றுக்கு 50 பேர் விகிதம் விளையாட அனுமதிப்பார்கள். அதில் சிறப்பாக விளையாடியவர்கள் இறுதி சுற்றுக்கு செல்வார்கள்.
மாடுபிடி வீரர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி மது அருந்தி இருக்கக் கூடாது, யாரிடமும் சண்டையிடக்கூடாது, காளைகளைப் பிடித்து விட்டதாக சொன்னால் அதன் பிறகு விட்டுவிட வேண்டும். நெறிமுறைகளை மருத்துவ பரிசோதனை நடக்கும் இடத்தில் விவரிப்பார்கள் என மாநகர காவல் லோகநாதன் கூறினார்.




