புதுக்கோட்டை மாநகராட்சி 33 வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன்பு otp நம்பர் அளித்து சேர்ந்துள்ளார் இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று திமுகவிலிருந்து அவர் விலகி முறைப்படி தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் செய்திருந்தனர் அத்தோடு புத்தாண்டு விழாவும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்

இந்த நிலையில் திமுக கவுன்சிலர் ஒருவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் சமூக வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து திமுக மாவட்ட நிர்வாகிகள் அந்த கவுன்சிலர்ரோடு தொடர்பு கொண்டு அவருடைய விளக்கத்தை பெற்றனர் மேலும் திமுகவிலிருந்து விலகி செல்லக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது ஆனால் அவர் தன்னுடைய வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் திமுகவிலிருந்து தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறி தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு உறுதியாக இருந்த நிலையில் இன்று காலை அந்த கவுன்சிலர் தமிழக வெற்றிக்காக அலுவலகத்திற்கு வரவில்லை இதனை தொடர்ந்து மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தமிழக வெற்றி கழக தலைவர் பர்வேஸ் அந்த கவுன்சிலர் தொடர்பு கொண்டு கேட்டபோது மாவட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள் தன்னோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் தன்னை வெளியே செல்லக்கூடாது என்று கூறி மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக்கான மாநில நிர்வாக குழு உறுப்பினர் பர்வேஸ் திமுகவிலிருந்து மாநகராட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் சேருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதலில் 33 வது வார்டு பெண் கவுன்சிலர் ராஜேஸ்வரி சேர்வதற்கு உண்டான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தோம் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கான அலுவலகத்திற்கு அந்த கவுன்சிலர் வந்து அதனுடைய செல்போனில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கான ஆன்லைனில் விண்ணப்பம் செய்து அவருடைய நம்பருக்கு ஓடிபி பெற்று தமிழக வெற்றி கழகத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் இந்த நிலையில் புத்தாண்டு தனமான இன்று முறைப்படி அவர் திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழக உறுப்பினர் அட்டை பெற்று அடிப்படை உறுப்பினராக சேருவதற்கான விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் காலை வரை அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை அதன் பிறகு அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது இரவு முதல் அந்த கவுன்சரை திமுக நிர்வாகிகள் தங்களுடைய கட்டுப்பாட்டின் வைத்துள்ளதாக அவர் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் தமிழக வெற்றி கழக உறுப்பினராக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஆணை நிலையில் தமிழக வெற்றிக்கான உறுப்பினரை தான் தற்போது திமுக தங்களுடைய கட்டுப்பாட்டின் வைத்துள்ளதாகவும் இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தலைமை இடம் பேசி ஒரு முடிவு எடுப்பதாகவும் பேட்டியின் போது அவர் கூறினார்
தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக திமுக கவுன்சிலர் சேர்ந்த நிலையில் அவரை வெளியே செல்ல விடாமல் திமுக நிர்வாகிகள் செய்து நடவடிக்கையால் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது




