அகஸ்தீஸ்வரம் பேரூர் 12 வது வார்டு பாஜக முன்னாள் கிளை தலைவர் கவற்குளம் த.சிவகுமார் என்ற ஐயப்பன் அக்கட்சியில் இருந்து விலகி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக செயலாளர் விஜய கங்காதரன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி திமுக கவுன்சிலர் பிரேம் ஆனந்த், மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், ஒன்றிய பிரதிநிதி அகஸ்தியலிங்கம், அகஸ்தீஸ்வரம் பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தேவகி மற்றும் நிர்வாகிகள் மணி, சுபாஷ், சீதாராமன் உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.




