புதுக்கோட்டையில் 24 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரும் நான்கு பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கும் நிகழ்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 28 பயனாளிகளுக்கு நான்கு சக்கர நாற்காலிகள் உட்பட மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டன. இது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன அதன் நீட்சி தான் இன்றைய நிகழ்வு.
திமுக கூட்டணியைப் பொறுத்த மட்டிலும் நாங்கள் மற்ற கட்சிகளை கண்டோ கூட்டணிகளை கண்டோ பயப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைய திட்டங்களை செயல் படுத்தியிருக்கிறது.
அதனால் வெற்றி பெற இயலும். ஒன்றிய அரசு போதிய அளவு நிதியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவதில்லை. அதனால் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் இதுவரை 80 சதவீதம் மட்டுமே செய்ய முடிந்திருக்கிறது. திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று நண்பர் விஜய் கூறுகிறார் என்றால் அது அவருக்கு ஜனநாயக உரிமை. ஆனால் நாங்கள் பலமாக இருக்கிறோம் என்பதற்கு தமிழ்நாட்டில் செய்திருக்கும் நலத்திட்டங்களே சாட்சியாக இருக்கிறது.
வரும் ஜனவரி 2ஆம் தேதி எங்கள் தலைவர் வைகோ நாட்டு மக்கள் ஜாதி மதங்களைக் கடந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக திருச்சியில் இருந்து மதுரை வரை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது நடை பயணமானது ஸ்டெர்லைட் ஆலை முதற்கொண்டு முல்லைப் பெரியாறு அணை நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறது. அரசிடம் என்னதான் எடுத்துச் சொல்லி சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இன்றைக்கு சமூகத்தில் நிலவும் பல சமூக சீர்கேடுகளுக்கு அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ காரணமல்ல பொதுமக்கள் தான் காரணம். இது நான் பல இடங்களிலும் திருமண வீடுகள் உட்பட எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்லி வருகிறேன் எனவே திருந்த வேண்டியது மக்கள்தான்.
அதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. கரூரில் நடைபெற்ற வீரத்தின் முகத்திற்கு காரணம் நண்பர் விஜய் காரணம் அல்ல. அவர் குழந்தைகளை எல்லாம் கொண்டுவர வேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் அதையும் மீறி சிறு குழந்தைகளை எல்லாம் அழைத்து வந்து தான் இந்த விபத்தில் சிக்கி இருக்கிறார்கள்.

வரும் தேர்தலில் எங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் எதுவும் இதுவரை சொல்லவில்லை. மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேறு ஒன்றும் கூடாது என்பதற்காகத்தான் இந்த கூட்டணி. நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. மற்ற கட்சிகள் கேட்கிறார்கள் என்றால் அது அவர்களது உரிமை. இந்தியா கூட்டணி கடந்த எட்டு வருடங்களாக வலுவான கூட்டணியாக இருக்கிறது. இந்த கூட்டணியை பிளவுபடுத்த வேண்டும் என கடந்த மூன்று ஆண்டு காலமாக பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் தனி சின்னம் கேட்டு நின்று வெற்றி பெற்றோம் என்றால் அது தனி. கடந்த ஏழு எட்டு மாதங்களாக எங்கள் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் வருமானவரித்துறை உள்ளிட்ட பலவும் நோட்டீஸ் விட்டு இருக்கின்றார்கள். தனி சின்னத்தில் போட்டியிடுவதால் அல்லது திமுக கூட்டணியின் தலைமை அறிவிக்கும் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது அந்த நேரத்துக்கு தலைவர் முடிவெடுப்பார்.
நடிகர் விஜய்க்கு இளைஞர் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பது பார்ப்பதற்கில்லை. அவர் பாஜக அதிமுக கூட கூட்டணி சேரப் போவதுமில்லை என்பதே அறிவித்துவிட்டார்.
மூன்று கூட்டணி நான்கு கூட்டணியாக இருந்தாலும் எங்களது கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் என்றார்.
பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாகத் அலி மதிமுக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி உள்ளிட்ட பலரும் இருந்தனர்.




