• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு..,

ByP.Thangapandi

Dec 30, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மூல ஸ்தானத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருளிய வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் நம்மாழ்வார் சுவாமிகள் கோவில் பிரகாரத்திற்குள் வலம் வந்து பெருமாள் கோவில் உள்பகுதியிலும், ஆழ்வார் வெளிப்பகுதியிலும் வைக்கப்பட்டு ஆழ்வார் பாசுரங்கள் பாடி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறந்ததும், ஆழ்வாருக்கு ஆசி வழங்கிய வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமியை ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து, வழிபாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று, சாமி தரிசனம் செய்தனர்.