விருதுநகர் மாவட்ட தலைநகரில் கடந்த சில நாட்களாக கைக்குழந்தையை வைத்து கொண்டு நகர் முழுவதும் ஒரு பெண் யாசகம்(பிச்சை) எடுத்து வருகிறார். குழந்தைகளை காட்டி யாசகம் பெறுவது 1869 363 (A) பிரிவு சட்டபடி குற்றமாகும்.

பலவருடங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு கும்பல் விருதுநகர் பாண்டியன் நகரில் செயல்பட்டு வந்தது. அன்றைய மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த கும்பலை ஒழித்து கட்டினார்,அதே போன்று தற்போதைய மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.





