குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் செங்கல்பட்டு மாவட்டம் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2ம் ஆண்டு குருபூஜை,திருவுருவப்படம் வழங்கும் நிகழ்வு மற்றும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 — ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், மறைந்த தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2ம் ஆண்டு குருபூஜை விழா, கேப்டனின் திருவுருவப் படம் வழங்கும் நிகழ்வு மற்றும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான திரு. கெங்காதரபாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பல்லாவரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனகை டி. முருகேசன் (Ex.MLA) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் K. சுரேஷ்ராஜ்,
மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் D. பாபு, ஒன்றிய அவை தலைவர் K.M. லோகநாதன், ஒன்றிய பொருளாளர் C.M. செல்லன், ஒன்றிய துணை செயலாளர்கள் T. தென்னரசு, சித்ரா பரந்தாமன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் R. சதீஷ்குமார், உள்ளிட்ட ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சமூக சேவை, அரசியல் பயணம் மற்றும் மக்களுக்கான அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து பாராட்டினர்.
இந்த ஆலோசனை கூட்டம் அமைதியாகவும், ஒற்றுமையுடனும் நடைபெற்று, விழாவை சிறப்பாக நடத்துவதற்கான தீர்மானங்களுடன் நிறைவடைந்தது.




