• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விதிமுறைகளுடன் அனுமதி..,

ByKalamegam Viswanathan

Dec 23, 2025

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி முதல் 22ஆம் தேதி காலை வரை போலீசார் மலைக்குச் செல்ல தடை விதித்தனர் .

இந்நிலையில் 21 ஆம் தேதி சந்தனக்கூடு விழாவிற்காக அனுமதி வழங்கி அதன் பேரில் மலைமேல் உள்ள கல்லத்தி மரத்தில் துணை கொடி ஏற்றப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கோட்டை தெரு மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்று அனுமதிக்காமல் இவர்களை அனுமதித்தது எப்படி என போலீசருடன் வாக்குவாதம் செய்தனர் .

அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நேற்று காலை முதல் மலைக்கு செல்ல விதிமுறைகளுடன் அனுமதி அளித்தது .

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அதற்கு செல்ல நேற்றும் முதல் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று மொத்தம் 124 பேர் மலைக்கு மேல் சென்றனர் .

இதில் கேரளாவில் இருந்து சுற்றுப்பயணமாக வந்த என்பது பெரும் மற்றும் மதுரை பிறப்பகுதியில் இருந்து வந்த 13 பேரும் சேர்த்து 83 பேர் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காசென்று வந்தனர்.

இதேபோல் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து 31 பேர் சாமி தரிசனம் செய்தனர் .

திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் உள்ள சிக்கந்தர் தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் செல்பவர்களின் முகவரி மற்றும் செல்போன் (அலைபேசி) எண்களை பதிவு செய்து மலைக்கு செல்ல அனுமதி அளித்தனர்.