அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு பெறப்பட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தனி தொகுதிக்கு தாழை நீயூஸ் & மீடியா குழு தலைவரும் ,நமது அரசியல்டுடே வார இதழின் பதிப்பாளரும் , ஆசிரியருமான தா .பாக்கியராஜ் அவர்கள்
விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்தும் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறார்கள் , அதில் ஒரு பகுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலுகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்ஜிஆர் மாளிகையில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.
இதில் விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதி சட்டமன்ற எண் 203 க்கு தாழை நீயூஸ் & மீடியா குழும தலைவர், .நமது அரசியல் டுடே வார இதழின் பதிப்பாளரும் ஆசிரியருமான தா .பாக்கியராஜ் விருப்பமனுவை பூர்த்தி செய்து கழக அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் வாலாஜா கணேசன் .கழக ஓட்டுனர் அணி அமைப்பு செயலாளர் சங்கர் தாஸ் ஆகியோரிடம் வழங்கினார்.




