தேனியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாபெரும் அன்னதான விழா மற்றும் ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது

மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் தமிழன் அவர்களின் 12 -ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் மற்றும் ரத்ததான முகாம் நடத்த வேண்டும் என்று பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவர் KA.முருகன் ஜி உத்தரவு பேரில்.
இன்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின்
மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் MPS .முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதன் முன்னதாக எஸ் ஆர் தமிழன் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் 3000 பேருக்கு அன்னதானமும் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (மரு)முத்து சித்ரா தலைமையில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் ஜெகன் ஆண்டிபட்டி ஒன்றிய பொதுச் செயலாளர் PK.ராஜா, அதிமுக மாவட்ட செயலாளர் முற்கோடை MP.ராமர், பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராம்ராஜ், மாநில இளைஞரணி செயலாளர் பிரபாகரன். மற்றும் பாரதிய பார்வர்ட் கட்சியின் தேனி ஆண்டிபட்டி கம்பம் போடி சின்னமனூர் பெரியகுளம் நிர்வாகிகளும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளும் தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா தலைமையிலான மகளிர் அணி குழுவும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.




