கோவை பீளமேடு பகுதியில் உள்ள பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தால் முன்னோடிகளுக்கான பாராட்டு விழா பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது.

1955 ஆம் ஆண்டு பி.இ இயந்திரப் பொறியியலில் முதல் பட்டதாரியும், புது தில்லியின் இந்திய காற்றாலை மின் சக்தி சங்கத்தின் முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கையன் தலைமை விருந்தினராகவும், 1977 ஆம் ஆண்டு பி.இ. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியும், கோயம்புத்தூரின் மேக்னா எலக்ட்ரோகாஸ்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான நா.கிருஷ்ணசாம்ராஜ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். கல்விச்சிறப்பு, புத்தாக்கம் மற்றும் தொழில்-கல்வி நிறுவன ஒத்துழைப்பை ஆதரிக்கும் ஒருவலுவான, உலகளாவிய பூ.சா.கோ தொழில்நுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் நீண்டகால சேவை ஆற்றிய கௌரவ புரவலர்கள் (Patrons), தலைவர்கள் (Presidents), செயலாளர்கள் (Secretaries) மற்றும் கிளைத்தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட கடந்த கால மற்றும் தற்போதைய முன்னாள் மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூ.சா.கோ தொழில்நுட்ப முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வி.கிருஷ்ணகுமார் வரவேற்புரை ஆற்றினார். பூ.சா.கோ தொழில்நுட்ப முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலரும் (Patron), பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வருமான கே.பிரகாசன் தலைமை உரையாற்றினார். விழாவில், கல்லூரியின் 1955-ஆம் ஆண்டு முதல் பேட்ச் (Batch) பட்டதாரிகள் பூ.சா.கோ சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். பூ.சா.கோ தொழில்நுட்ப முன்னாள் மாணவர்சங்கத்தின் பொதுச் செயலாளர் அரசு நன்றியுரை ஆற்றினார்.




