• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பள்ளிவாசல் செயலாளர் ஆரிஃப் கான் செய்தியாளர்களை சந்தித்தபோது..,

ByKalamegam Viswanathan

Dec 19, 2025

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் போய்க்கொண்டிருக்கிறது தர்கா தரப்பில் உங்களுடைய கருத்து பற்றிய கேள்விக்கு

ஆண்டாண்டு காலமாக பல நூற்றாண்டு காலமாக தீபம் என்பது உச்சி பிள்ளையார் கோவிலில் தான் ஏற்றுவார்கள் 1994 இல் தர்கா எடுத்து தீபம் ஏற்றுவோம் என்று ஒரு பிரச்சனையை உருவாக்கி ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு வருடமும் நடத்துவார்கள் அதன் பிறகு கைது செய்து போய்விடுவார்கள் ஆனால் இந்த வருடம் தீபம் ஏற்ற வேண்டும் என்று வழக்கு ஒன்று தொடர்ந்தார்கள் அந்த வழக்கு நடந்ததே எங்களுக்கு தெரியாது

நீதிபதி மேலே சென்று ஆய்வு செய்த பின்பு தான் எங்களுக்கு அறிவிப்பு வந்தது எங்களுடைய கருத்து என்னவென்றால் ஆய்வு செய்ய வரும்போது தர்கா சார்பில் எச்ஆர்எம் சார்பிலும் இரண்டு பெயர்களையும் வரவழைத்து மாவட்ட ஆட்சியரையும் அழைத்து இரண்டு பேரிடமும் கருத்து கேட்டிருந்தால் எங்களுக்கும் திருத்தி இருந்திருக்கும் அவர்களுக்கும் திருப்தி இருந்திருக்கும் அவசர அவசரமாக இந்த வழக்கு 4 நாட்களில் முடிக்கப்பட்டது சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம் அதேபோல் அவசர கோணத்தில் எதையும் விசாரிக்காமல் யார் ஆதாரம் கொடுத்தார்களோ அவர்களிடம் உறுதியான ஆவணங்கள் வாங்காமல் எங்களிடம் எதையும் கேட்காமல் அவசரமாக முடித்தார்கள். எங்களிடம் சரியான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது சரியான புகைப்படங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 5 இடங்களை தர்காவுக்கு நியமிச்சிருக்கிறார்கள் நெல்லித்தோப்பு, படிக்கட்டு, மண்டபம் தர்ஹா,பிளாஸ்டிக் அவர்கள் சொல்வது என்னவென்றால் தீபத்தும் சர்ச்சைக்குரிய கல் என்று கூறுகிறார்கள் நெல்லித்தோப்பு என்பது நடுப்பகுதியில் உள்ளது தர்கா அதற்கு மேல் உள்ளது மலை உச்சியில் இடையில் படிக்கட்டுகள் உள்ளது அதனால்தான் ஆண்டாண்டு காலமாக தீபம் உச்சி பிள்ளையார் கோவிலில் ஏற்றுகிறார்கள்.

திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாக தொப்புள் கொடி உறவாக இருக்கின்றோம் தேவையில்லாமல் இந்த சர்ச்சைகளை கொண்டு வந்து அதில் மதத்தை பிரித்து இன்று வரை தேரோட்டம் வந்தால் நாங்கள் அவர்களுக்கு நீர் மோர் குளிர்பானங்கள் போன்றவை அவர்களுக்கு வழங்குகிறோம் அதே போல் அவர்களும் சந்தனக்கூடு வந்தால் அவர்களும் எல்லாம் செய்கிறார்கள்

எங்களிடம் யாரும் கேட்கவில்லை தீபம் ஏற்ற போறோம் என்று தர்கா நிர்வாகம் இஸ்லாமிய நண்பர்கள் அமைதியாக இருக்கிறார்கள் எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம் அவர்கள் வேலை அவர்கள் பார்க்கிறார்கள் நாங்கள் எதையும் சட்டரீதியாக செல்வோம் நாங்கள் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை நேற்று கூட ஒரு தனியார் செய்தியில் 1805 தான் தர்கா உருவாகியுள்ளது என்று கூறி இருக்கிறார்கள் 12ம் நூற்றாண்டுக்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது யாரது தவறாக கூறினார்களோ அவர்களிடம் ஆவணம் உள்ளதா எங்களுடைய கேள்வி அதுதான் அதேபோல் நேற்று ஓர் தனியார் செய்தியில் கொடிமரம் நான்கு ஆண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள் ஆனால் அது தவறு பல நூற்றாண்டு காலமாக அந்த மரத்தில் தான் நாங்கள் கொடி கட்டிக் கொண்டிருக்கிறோம் 1994 இல் கொடி மரத்தை மர்பா நபர்கள் சேதப்படுத்தி உள்ளார்கள் தொடர்பாக எங்களிடம் எஃப் ஐ ஆர் மற்றும் ஆவணங்கள் இருக்கிறது எங்களுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

2021 இல் ஆய்வு மேற்கொண்டு அது என்ன கல் என்ன கொடி மரம் என்று தெரியவில்லை ஆய்வு செய்து அறிவிக்கப்பட்டு கொடியேற்ற அனுமதி கொடுத்துள்ளார்கள் 2012ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கு கோப்பு பார்த்த பிறகு கொடி ஏற்றங்கள் என்று அனுமதி கொடுத்து இருக்கிறார்கள் 1994 இல் கொடிமரம் காணாமல் போய்விட்டது என்று அப்பயார் கொடுத்திருக்கின்றோம் இவ்வளவு ஆவணங்கள் எங்களிடம் இருக்கும் போது வேறு என்ன ஆவணம் கொடுக்க வேண்டும் எங்களைப் பொறுத்தவரை ஹிந்து முஸ்லிம் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் இங்கு மத கலவரம் உருவாக்குகிறார்கள், அதை ஒருபோதும் இங்கு இருக்கும் இந்த மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்

எங்களுடைய சந்தனக்கூடு எங்களுடைய பந்தோஸ்துகளாக இருந்து எங்களுடன் ஒன்றாக இருந்து உங்களுடைய சந்தனக்கூடு குடிமரத்தை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் எப்படி நாங்கள் கார்த்திகை தீபம் அன்று சிறப்பாக அவர்களுடன் கொண்டாடுகிறோமோ அதே போல் எங்களுடன் சந்தனக்கூடு நிகழ்ச்சி அவர்களும் கொண்டாடுவார்கள் எங்களுக்கு ஊர் மக்களுடைய உறுதுணை உள்ளது நாங்கள் எதை பற்றியும் கவலைப்படவில்லை.

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி ஊற்றுவோம் இதில் எங்களுடைய முதல் காசு யார் கொடுப்பார்கள் என்று கேட்டால் எங்களுடைய தொப்புள் உறவுகள் தான் கொடுப்பார்கள் நாங்கள் வருடம் வருடம் பணம் கொடுப்பதை எழுதி வைத்துள்ளோம் ஐயா அவர்கள் தான் தருகிறார்கள் வாழைப்பழம்,வடை சர்பத்து போன்றவை அனைத்தும் கொடுப்பார்கள் நாங்கள் எப்போதும் ஒன்றாக தான் இருக்கின்றோம் மறைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை எல்லா இடத்திலும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் நாங்கள் அனைவரும் மனித மனமாக தான் பார்க்கிறோம் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தான் எல்லோருக்கும் ஒரே ரத்தம் தான் இருக்கிறது தனித்தனி ரத்தம் இருக்கிறதா

சந்தனக்கூடு தொடர்பாக சர்ச்சை நடந்து வருகிறது அரசு தரப்பில் அமைதி கூட்டம் நடைபெறுகிறது பற்றிய கேள்விக்கு

ஆண்டாண்டு காலமாக வருடம் வருடமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும் என்ன என்றால் சந்தனக்கூடு கொடிமரம் எப்படி நடக்கிறது என்னென்ன நீங்கள் செய்வீர்கள் எப்படி ஊர்வலம் செல்வீர்கள் என்று கேட்பார்கள் கோப்பை எடுத்து பார்த்தார்கள் அதைப் பார்த்து நீங்கள் அதே போல் நடைமுறை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள் இப்போது தமிழக அரசின் காவல்துறையின் சட்ட ஒழுங்கு சீர் குறைந்திட கூடாது என்று மிகத் துல்லிதமாக இருக்கிறார்கள் அதற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.