• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்..,

BySeenu

Dec 19, 2025

கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகரியுமான பவன்குமார் இன்று வெளியிட்டார்.

அதில் எஸ்ஐஆர் (SIR) பணிகளுக்கு முன்பு, கடந்த 27-10-2025 நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள் பதிவாகியிருந்தனர்.

எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து,6,50,590 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதனால், தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 25,74,608 ஆக உள்ளது.

நீக்கப்பட்ட வாக்காளர்களின் காரணம்,இறந்தவர்கள்** – 1,19,489 பேர்,முகவரியில் இல்லாதவர்கள் 1,08,360 பேர்,நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் 3,99,159 பேர்,இரட்டை பதிவுகள் 23,202 பேர்,இதர காரணங்கள் 380 பேர்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை பொதுமக்கள் சரிபார்த்து, பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது திருத்தம் தொடர்பான மனுக்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.