பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு:


அதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஈரோட்டில் தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டம் குறித்த கேள்விக்கு:
அவர்(செங்கோட்டையன்) அங்கு சென்றதிலிருந்து என்னிடம் பேசவில்லை.
உங்களுடன் ஆலோசனைக்கு பிறகு தான் என் டி ஏ கூட்டணியில் சேர உள்ளதாக டிடிவி கூறியது குறித்த கேள்விக்கு:
என்னிடம் கூறவில்லை.
100 நாள் வேலை திட்டம் குறித்த கேள்விக்கு:

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை வர உள்ளது. அது நூறு சதவீதம் மத்திய அரசு கொடுத்து கொண்டிருந்தது. தற்போது 40 சதவீதம் குறைத்து தமிழக அரசு என்று சொல்கிறார்கள்.
23ம் தேதி ஆலோசனை கூட்டம் வரை பொறுத்து இருக்கவும் என கூறினார்.




