*புதுக்கோட்டைக்கு ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தர உள்ளதாக கூறி 59 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை பாஜகவினர் தூய்மைப்படுத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் தற்போதைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். அவர் புதுக்கோட்டையில் பிரச்சாரத்தை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அல்லது அமித்ஷா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பொதுக்கூட்டம் ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக இடம் பாஜக மற்றும் காவல் துறை சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயலில் தனியாருக்கு சொந்தமான 59 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடம் இன்று தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த பகுதி காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
20க்கும் மேற்பட்ட வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் உளவுத்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு தற்போது இருந்தே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் டிக்டேட்டர்
உள்ளிட்ட கருவிகளை வைத்து தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர்கள் பின்புலங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது*
மேலும் அந்த இடம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஐந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர்மற்றும் உளவு பிரிவினர் தற்போதே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளின் பெயர் மற்றும் பின்புலங்களும் காவல்துறையால் சேகரிக்கப்பட்ட வருகிறது
மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்கான ஹெலிகாப்டர் இறங்குதளம் தயாரிப்பது தொடர்பாகவும் காவல்துறையினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




