மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் கருப்பட்டி மற்றும் நாச்சிகுளம்
ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கருப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் நாச்சிகுளம் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தொடர்ந்து நாச்சிகுளம் ஊராட்சி பகுதியில் நாச்சிகுளம் ஆதிதிராவிடர் காலனி நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிகளில் கருப்பட்டி நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





