தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாட்டில் 23 முதலமைச்சரின் சிறு விளையாட்டு மைதானங்களை தொடங்கி வைத்தனர்.

அதன் ஒரு பகுதியாக ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மூன்று கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பாக ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் புதிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். இந்நிலையில் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட சிறு மைதானத்தின் கட்டிடப் பணியை தொடங்கப்பட்டது. ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் திருவோணம் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா , பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகேயன் , ரமேஷ் குமார் , முருகையன், செல்வராஜ் நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் உள்ளாட்சி, ஊராட்சி, ஒன்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.




