துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் கேரம் போட்டி நடந்தது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு திண்டுக்கல் மாநகர திமுக மாணவர் அணி இரண்டாம் பகுதி சார்பில் கேரம் போட்டி நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியினை மாவட்ட கழக செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
மாவட்ட மாணவர் அணி செயலாளர் அஸ்வின் பிரபாகரன் மாநகர மாணவரணி அமைப்பாளர் மதுசூதனன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆண்கள் ஒற்றைய பிரிவு ,பெண்கள் ஒற்றைய பிரிவு, ஆண் பெண் இருபாலர் பிரிவு உள்ளிட்ட மொத்தம் 60 அணிகள் கலந்து கொண்டன.
இரட்டையர் பிரிவு முதலாம் பரிசு பெற்ற ஜஸ்டின் ராஜ் பிலிக்ஸ் ஆகியோருக்கு மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி அவர்கள் முதலாம் பரிசு மற்றும் பரிசுகோப்பையை வழங்கினார் .
ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு முதலாம் பரிசை பிலிக்ஸ் அவர்களுக்கு மாநகர செயலாளர் ராஜப்பா அவர்கள் வழங்கினார்.
பெண்கள் பிரிவு முதலாம் பரிசு தனலட்சுமி அவர்களுக்கு மேயர் இளமதி முதலாம் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.
இது தவிர நான்காம், மூன்றாம், இரண்டாம் பரிசுகள் தனித்தனி பிரிவுகளுக்கு கோப்பையுடன் வழங்கப்பட்டது.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட நடுவர்களுக்கு ஆறுதல் பரிசு, போட்டியில் கலந்து கொண்ட அணிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநகர கழக செயலாளர் துணை மேயருமான ராஜப்பா, மேயர் இளமதி, பகுதி கழகச் செயலாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், மாநகர பொருளாளர் மீடியா சரவணன், பகுதி கழக பொறுப்பாளர்கள் ராஜேந்திரகுமார், பஜ்லுல் ஹக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போட்டியின் நிறைவாக இரண்டாம் பகுதி கழக மாணவரணி அமைப்பாளர் பரத் நன்றி கூறினார்.




