தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுப்பு செய்து நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கடந்த 30 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மாட்டு வண்டி பந்தயம் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று நிகழ்த்தப்பட்டது. நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயமானது புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் ஜீவா நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.


எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிச்சடி வரை சென்று திரும்பும் வகையில் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மாட்டுவண்டி பந்தயம் பரபரப்பாக தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு நாம் காணும் காட்சியானது சிறிய மாட்டு வண்டி பந்தயத்தின் இரண்டாவது நிகழ்வாகும். இந்த போட்டியில் 20 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.




