ஸ்டார் குரு அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மற்றும் விநாயக் கல்வி நிறுவனம் இணைந்து மதுரை விளாச்சேரி பகுதியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பதற்கான பயிர்ச்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் ஓய்வு பெற்ற ஆந்திர மாநில காவல் துறை இயக்குனர் கிஷோர் குமார் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிஷோர் குமார் கூறுகையில்:

மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக வகுப்புகள் நடைபெறுகிறது. முதுகலை பட்டப் படிப்பு படிப்பவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். அதில் முதல் வகுப்பை நான் எடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி. மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதை நடத்துபவர்கள் மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆலோசனை குறித்த கேள்விக்கு:

போட்டித் தேர்வு அதுக்கு பிரிப்பரேஷன் பற்றி ரொம்ப நல்ல விஷயங்கள் இன்னிக்கு நான் சொல்லி இருக்கிறேன். தேர்வுக்கு குறுகிய காலத்தில் தயாராகாமல் கொஞ்சம் நீண்ட காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். வேலைக்கு மட்டுமான முயற்சியாக இல்லாமல் அறிவை வளர்த்துக் கொள்ளும் முயற்சியாக இருக்க வேண்டும். உளவியல் ரீதியாகவும் முன்னேற்றிக் கொள்வதற்கு ஆலோசனைகள் வழங்கி இருக்கிறேன்.
தேசிய தேர்வுகளில் தமிழக மாணவர்கள் குறைந்த தரவரிசை குறித்த கேள்விக்கு:
முன்பை விட இப்போது கொஞ்சம் அதிகமாகி வருகிறார்கள் சென்னையில் புதிதாக நிறைய இன்ஸ்டிட்யூட் அதிகமாகியுள்ளது. தமிழ்நாடு கல்வி முறை தரம் இந்தியாவிற்கு உதாரணமாக உள்ளது. இங்குள்ள பயிற்சி நிறுவனங்களும் நன்றாக செய்கிறார்கள்.
படிப்பு மட்டுமின்றி உடல் தகுதியில் மாணவர்களுக்கான பயிற்சிகள் குறித்த கேள்விக்கு:
உடல் தகுதி ரீதியாக தயாராகுவது இந்திய முழுவதுமே நாம் தவறவிடும் ஒரு விஷயமாக உள்ளது. அதற்கான வசதிகள் செய்வதில் சில கஷ்டங்கள் உள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு முயன்று வருகிறது. டாக்டர், இன்ஜினியர் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று நினைக்காமல் அனைத்து துறைகளுக்கும் செல்வதற்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். கலை, கல்வி மட்டுமின்றி சிலம்பாட்டம் போன்ற விஷயங்களிலும் மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
தொடர்ந்து பேசிய ஸ்டார் குரு தொண்டு அறக்கட்டளை நிறுவனர் குருசாமி பேசுகையில்:

ஏற்கனவே நீட் தேர்வு எழுதுவதில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மாணவர்களை தேர்ந்தெடுத்து 60 முதல் 70 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இன்று இங்கே டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு பயிற்சி அளிக்கிறோம். முதல் கட்டமாக இங்கு தொடங்கி இருக்கிறோம். கிராமப்புறங்களில் இருக்கும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து அதை சரி செய்து வருகிறேன். கிராமப்புறங்களில் இருக்கும் 125க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தனியாக ஆசிரியர் வைத்து படிக்க வைத்து வருகிறோம் என குருசாமி கூறினார். முடிவில் விநாயகர் கல்வி நிறுவன தலைவர் முரளி மாணிக்ராஜன் நன்றி கூறினார்.




