மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏவான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
குறிப்பாக சோழவந்தான் அடுத்து அம்மச்சியாபுரம் கிராமத்தில் வசித்து வரும் பட்டியல் இன மக்கள் 5 ஆண்டுகளாக வெங்கடேசன் எம் எல் ஏ தங்கள் கிராமத்திற்கு வரவில்லை என சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.


இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள பட்டியல் இன பொதுமக்களும் ஐந்து ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களை பார்க்க இதுவரை சட்டமன்ற உறுப்பினர் வரவில்லை என புகார் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளான இன்று மதுரை அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் உடன் இருபதுக்கும் குறைவான திமுக நிர்வாகிகளே வந்திருந்ததால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆளுங்கட்சியான திமுகவிற்கு இருபதுக்கும் குறைவான நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இருந்தது சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் ஆதரவு குறைந்து வருவதாக அந்த பகுதி மக்கள் பேசி சென்றனர்.
கூட்டம் குறைவாக இருந்ததால் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை உடன் அழைத்து கூட்டத்தை காண்பித்து நிகழ்ச்சியை முடித்து சென்றார்.
சோழவந்தான் தொகுதியில் கடந்து சில சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக அதிமுக வெற்றி பெற்று வந்த நிலையில் சென்ற தேர்தலில் அதிமுகவினர் மத்தியில் ஒற்றுமை இல்லாததால் திமுக வெற்றி பெற்றதாகவும் ஆனால் இந்த முறை சோழவந்தான் திமுக எம்எல்ஏ வெங்கடேசனுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பு காரணமாக வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்என அந்த பகுதி பொதுமக்கள் பேசிச் சென்றனர்.
முக்கியமாக சோழவந்தான் அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகள் வெங்கடேசன் எம் எல் ஏ மீது அதிருப்தியில் இருப்பதே இதற்குக் காரணம் என ஒரு சில நிர்வாகிகள் கூறினர்.




