திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணி சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக 144 தடை உத்தரவு திருப்பரங்குன்றம் பகுதிக்கு போடப்பட்டுள்ளது.

இன்று விருதுநகர் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து இன்று காலை மதுரை விமான நிலையம் வரும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென தெரிவித்து வரும் நிலையில்,

மதுரை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது சோதனைக்குப் பின்பே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உதயநிதி ஸ்டாலினுக்கு வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.








