காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட சேமியான் குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜே.சி.எம் மக்கள் மன்ற தெற்கு தொகுதி தலைவர் அப்துல் பாசித் ஏற்பாட்டில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோருக்கு மழை நிவாரணமாக அத்தியாவசிய பொருளான பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ஜே.சி.எம் மக்கள் மன்றம் நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார். இதில் தெற்கு தொகுதி ஜே.சி.எம் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.








