திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் ஊராட்சி வலசுபாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை 43. இவர் அதே பகுதியில் 13 பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் மாட்டு கொட்டகைக்கு வந்து பார்த்த பொழுது இரண்டு மாடுகள் சரிந்து விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து அவர் பல்லடம் காவல்துறையினருக்கும் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் பசு மாடுகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து ஆய்வுக்காக பாகங்களை எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அவர் தனது மாட்டு கொட்டகைக்கு வந்து பார்த்த பொழுது மீண்டும் இரண்டு மாடுகள் உயிரிழந்த நிலையில் கடந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடம் மற்றும் மருத்துவத் துறையினர் மீண்டும் 2 பசு மாடுகளையும் பிரேத பரிசோதனை செய்து ஆய்விற்காக உடல் பாகங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








