விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே சேதுராமலிங்கபுரம் கிராமத்தில் சமய கருப்பசாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன.

திருப்பணி வேலைகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மகா கணபதி ஹோமம் ,முதல் காலயாக பூஜை, தீபாரதனை, இரண்டாம் கால யாக பூஜை, அதனைத் தொடர்ந்து விமான கலசத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சமய கருப்பசாமிக்கு பால் ,பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜை, நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.








