• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விவசாயிகளுடன் நீர்வரத்து பாதையை தூர்வாரி சீரமைக்க ஏற்பாடு..,

ByKalamegam Viswanathan

Dec 1, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோழங்குருணியில் சோழங்குருணி கண்மாய் உள்ளது.

தற்போது நிலையூர் கம்பி குடி கால்வாய் வழியாக செல்லும் நீர் சோழங்குருணி கண்மாயிலிருந்து மறுகால் பாய்கிறது .

கண்மாய் நீர் மறுகால் பாயும் போது விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி விவசாயிகள் மடையை அடைத்தனர்.

மடையை அடைத்ததால் கம்மாய் முழு கொள்ளவு எட்டும் நிலையில் தண்ணீரின் அளவு அதிகரித்து சோழங்குணி கம்மாயின் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகும் அபாய நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் சார்பாக ரவிச்சந்திரன் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார் அதனை எடுத்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினிஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் காவல்துறை சார்பில் எஸ்ஐ பாஸ்கர் உள்ளிட்ட சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர் அதனைத் தொடர்ந்து ககண்மாய் மடையன் அருகே உள்ள அடைப்பை சரி செய்து கால்வாய்களின் மூலம் நீர் செல்ல ஏற்பாடு செய்தனர் அதை ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாயில் தூர்வாரி மழை நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்தனர் .

இதனால் கண்மாய் நீர் ஊருக்குள் போகாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

கண்மாய் மறுகால் பாய்ந்து வாய்க்கால் வழியாக நல்லூர் கிராமத்திற்கு செல்லும் இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மழைக்காலங்களில் திறக்கப்படும் உபரி நீரினில் விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவதாக விவசாயிகள் மடையை அடைத்தனர் அதனையடுத்து தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து| பட்டா நிலங்களில் உள்ள வாய்க்காலை பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரி விவசாய நிலத்தில் நீர் புகாமல் வாய்காலை சீரமைக்க ஏற்பாடு செய்தனர்.