• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

விஸ்வ ஜனசேன புதிய கட்சி துவக்க விழா நிகழ்ச்சி.,

ByKalamegam Viswanathan

Dec 1, 2025

திருப்பரங்குன்றத்தில் விஸ்வ ஜனசேன புதிய கட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் விஷ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் விஸ்வ ஜன சேனா எனும் புதிய கட்சி துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் ஐயப்பன் தலைமை வைத்தார் பொதுச்செயலாளர் மகேஸ்வரன் வரவேற்புரை கூறினார்

கடந்த பத்தாண்டுகளாக விஸ்வ ஜன சக்தி தொழிற்சங்க பேரவை என்ற பெயரில் செயல்பட்டு வந்தோம் இதன் மூலம் சமூக மக்களுக்கு தொழிலாளர் நல வாரியம் மற்றும் அரசின் இதர உதவிகளை பெற்று தந்துள்ளோம்.

இதனையடுத்து விஸ்வகர்மா சமூக மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார அடிப்படையில் வாய்ப்புகளை உருவாக்கிட புதிய அரசியல் அமைப்பாக விஸ்வ ஜன சேனா என்ற அரசியல் கட்சியை துவங்கி உள்ளோம்.

இதன் மூலம் விஸ்வகர்மா சமூக மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசியல் ரீதியாக வெற்றி தந்திட விஸ்வ ஜனசேனா போராடும் என மாநில தலைவர் ஐயப்பன் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் திருமுருகன் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக விஸ்வகர்மா சமூக மக்களுக்காக விஸ்வ சக்தி தொழிற்சங்க பேரவையாக செயல்பட்டோம் இந்நிலையில் மிகவும் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ள சமூக மக்களுக்கு தேவையான கல்வி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் விஸ்வஜன சேனா என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளோம்.

இதன் மூலம் நமது விஸ்வகர்மா மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை மத்திய , மாநில அரசின் வாயிலாக பெற்றுத் தரவும்

ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த விஸ்வகர்மா கைவினை திட்டத்தின் மூலம் விஸ்வகர்மா சமுதாய மக்கள் அல்லாமல் பிற சமூகத்தை நினைத்து குளறுபடியான நிலையை மத்திய மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
அதனை மாற்றி விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு உதடுவிடும் வகையில் திட்டங்களை அறிவிக்க போராடினோம் .

இதேபோல் தமிழக அரசு அறிவித்த கலைஞர் கைவினைஞர் திட்டத்தின் மூலம் விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு தேவையான தொழில் திட்ட அறிக்கைக்கு வங்கிகள் மூலம் உதவி செய்திடவும் விஸ்வகர்மா மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி தரவும் மாண்புமிகு முதல்வர்மு.க.ஸ்டாலின் அவர்களை வேண்டுகிறோம்.

விஸ்வகர்மா ஜன சக்தி தொழிற்சங்க பேரரையின் மூலமாக தொழிலாளர்களுக்கு உதவிய மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம் என திருமுருகன் கூறினார் .கூட்டத்தில்28 தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன.