• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சாய்ந்த பலகைகளை சீரமைக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Nov 29, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகைகள் மண் அரிப்பு காரணமாக வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் ராமு தேவன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் பெயர் பலகை சாய்ந்துள்ளது .

இதனால் வெளியூர்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வது எப்படி என தெரியாமல் சிரமப்படுகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ஊர் பெயர் பலகைகள் ,சாய்ந்த பலகைகளையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.