அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி வெள்ளையந்தோப்பு ஊரைச் சேர்ந்த முருகன் அவர்களது மகன் சிவனேஷ் கடின நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவ உதவிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், மண்டல திமுக பொறுப்பாளருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி MP அவர்களிடம் திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி அவர்கள் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று இந்திய அரசின் PM SCHEME-ல் பரிந்துரை செய்து மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு ரூபாய் 3 லட்சம் வந்திருப்பதாக மத்திய அரசின் கடிதம் வந்த நிலையில் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்பொழுது குணமடைந்த வருகிறார். அவரது தாய், தந்தை அனைவரையும் கவிஞர் கனிமொழி கருணாநிதி MP அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தூத்துக்குடியில் நேரில் சென்று இன்று நன்றி தெரிவித்தனர். உடன் மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சுதன்மணி ஆகியோர் உள்ளனர்.








